அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தல் முடிவுகளை உலகமே உற்றுநோக்கி கவனித்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள நிலையில் வெற்றி யாருக்கு என்று நீர்யானை ஒன்று கணித்தது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

அதாவது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் குட்டி நீர் யானை ஒன்று இருக்கிறது. இந்த நீர் யானையின் முன்னிலையில் தர்பூசணியில் அலங்கரிக்கப்பட்ட ஒன்றில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மற்றொன்றில் கமலா ஹாரிஸ் சென்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நீர்யானை டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயர் எழுதப்பட்ட தர்பூசணி பழத்தை சாப்பிட்டது. இதன் காரணமாக அவர்தான் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இன்று காலை முதல் டொனால்ட் டிரம்ப் தான் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.