அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள் பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விட்டார்.
இந்த நிலையில் அமெரிக்காவை மீண்டும் குணப்படுத்துவோம். அமெரிக்காவின் பிரச்சனைகளை தீர்க்க உள்ளோம். குறிப்பாக எல்லை பிரச்சினைகளை தீர்ப்போம். அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கியது. இது ஒரு நம்ப முடியாத வெற்றி. வலிமையான வளமான அமெரிக்காவை உருவாக்குவேன் என வெற்றி பெற்ற பிறகு டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.