அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றிவாகை சூடியுள்ளார். இந்தியாவில் அமெரிக்காவில் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை நிகழவிடாமல் இரு முறை டிரம்ப் தடுத்து நிறுத்திவிட்டார்.
முதல்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அவரை தோற்கடித்து தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதேபோன்று தற்போது கமலா ஹாரிஸ் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் அவரையும் வீழ்த்தி ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இதனால் வரலாற்றில் இரு முறை முதல் அமெரிக்க பெண் அதிபர் என்ற நிகழ்வை அதிபர் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார்.