அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் புருனோ மார்ஸ். இவரும் கொரியாவை சேர்ந்த பாப் இசைக்குழுவான பிளாக் பிங்கை சேர்ந்த ரோஸும் இணைந்து அப்பாச்சோ என்ற பாடலை பாடிய நிலையில் அந்த பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு தற்போது பரதநாட்டிய கலைஞர்கள் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு பரதநாட்டிய கலைஞர் தன் குழுவுடன் இணைந்த இந்த பாப் பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிற்று உள்ள நிலையில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் அந்த குழுவில் மொத்தம் 6 இளம் பெண்கள் இருக்கும் நிலையில் பரதநாட்டிய அசைவுக்கு ஏற்றவாறு பாப் நடனமாடி அசத்தியுள்ளனர். இதோ அந்த வீடியோ
View this post on Instagram