தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாஸில், அமிதாப்பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் மாதம் வேட்டையன் திரைக்கு வரும். இந்நிலையில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ராணா டகுபதி வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகுபலி படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ராணா டகுபதி தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.