கடந்த ஆண்டு இஸ்ரோ தனது சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு இந்தியா என பெருமை பெற்றுள்ளது. இதனால் இந்த நாளை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அந்தவகையில் இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை வரும் 23-ஆம் தேதி கொண்டாட இருக்கிறது இதைமுன்னிட்டுபி. வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டத்தில் பங்காளித்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருது வழங்கப்பட இருக்கிறது. மேலும் அதன்படி 33 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.