வேலைக்கு செல்பவர்களும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் தினமும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுபவர்களும் உண்டு.
இந்த நிலையில் பெங்களூரு நகரில் ஏர் டாக்ஸி விரைவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் மூலம் நான்கு மணி நேரம் பயணம் செய்யும் இடங்களுக்கு 40 நிமிடத்தில் சென்றுவிடலாம் என கூறுகின்றனர். விரைவில் ஏர் டாக்ஸி சென்னையிலும் வரவேற்கிறதாம். அப்படி வந்து விட்டால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நாம் நினைக்கும் இடங்களுக்கு விரைவில் சென்று விடலாம்.