டைரக்டர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. வருகிற 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவிலும், அதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களாலும் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களை அனுமதிப்பதில் போலீசார் காட்டிய கெடுபடி, விழா முடிந்ததும் சேர்கள் சேதமானதாக போடப்பட்ட அபராதம் போன்றவற்றால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தற்போது விஜய் வெளிநாடு கிளம்பிச் சென்றதாக ஹோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.