பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த வருடம் அனிமல் திரைப்படம் வெளியாகி 900 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார்.‌

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சந்தீப் ரெட்டி வங்கா கலந்துகொண்டு பேசினார். அப்போது அனிமல் திரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியாகும் என்று அறிவித்ததோடு அந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என்று கூறினார். அதோடு இந்த படம் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்தார். இதைக் கேட்டவுடன் அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் சில ரசிகர்கள் கார்த்தியும் அப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.