உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் வாரிசு இல்லாத வசதியான குடும்பத்தை நோட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அந்த வீட்டிற்குள்நுழைந்து நல்லவர் போல நடித்து, அவர்கள் அசந்த நேரத்தில் பணம் நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றார்.

இப்படியே 9 குடும்பங்களில் ஸ்கெட்ச் போட்டு ராஜு திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இது குறித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு ராஜுவை கைது செய்தனர்.