தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சர்வதேச அரசியல் படிப்புக்காக சென்ற நிலையில் அவர் அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணாமலை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்தது போல் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது ராகுல் காந்தியை கண்டித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தி திணிப்பு தொடர்பாக நடைமுறையில் இல்லாத விஷயங்களை கூறுகிறார்.

முதல் முறையாக பிரதமராக இந்திரா காந்தி இறக்கும்போது உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் தான் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தாய்மொழி தமிழுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்துள்ளார்‌. அதன்படி சிங்கப்பூரில் ஒரு திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறிய நிலையில் அங்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் பிராந்திய மொழிகளை வளர்க்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளில் 10 சதவீதத்தை கூட காங்கிரஸ் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.