சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கௌதம் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்த 26 வயது உடைய செவிலியரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த இளம் பெண்ணை கௌதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் இளம்பெண் கர்ப்பமானார். அதன் பிறகு கட்டாய கருக்கலைப்பு செய்து திருமணம் செய்வதற்கு கௌதம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கௌதமை கைது செய்தனர்.