அமைச்சர் நாசர் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்  கையெழுத்திட மறுத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதிமுக சிறுபான்மையினர் இன மக்களுக்கு எதிராக இருக்கிறது.

இதன் மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமானது. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறிய நிலையில் பாஜகவுடன் கள்ள உறவில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அதிமுகவின் உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள் என்று கூறியுள்ளார்.