சென்னையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டார். இதனால் நான் நிச்சயம் அந்த விழாவில் கலந்து கொள்வேன்.
அதன்பிறகு கட்சி ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் அரசியல் நாகரீகத்தோடு இந்த விழாவில் பாஜக கலந்து கொள்கிறது. ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். மேலும் கடந்த ஜூன் மாதம் கலைஞரின் முழு உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் தமிழக அரசு வருகிற 17-ஆம் தேதி வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.