தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போது தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் அருவி மற்றும் தெலுங்கில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு அம்மை நோய் வந்துள்ளதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அம்மை நோயால் தன்னுடைய கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram