தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதன் பிறகு வாரிசு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் என அனைத்துமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தை தியேட்டரில் பார்த்து விட்டு வெளியே வந்த இசையமைப்பாளர் தமன் தேம்பி தேம்பி அழுதுள்ளார். அவரை இயக்குனர் வம்சி மற்றும் படக்குழுவினர் கட்டி அணைத்து சமாதானம் படுத்தினார். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.