சுமார் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் தற்போது கையில் கிடைத்த சம்பவமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அமெரிக்க நாட்டின் கென்டக்கி எனும் பகுதியில் வசித்து வரும் ட்ராய் ஹெலர் என்பவர் தனக்கு 10 வயதாக இருக்கும்போது சென்ற 1985ம் வருடம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அக்கடிதத்தை ஒரு அழகான பாட்டிலுக்குள் போட்டு புளோரிடா கடலில் எறிந்து உள்ளார். இதையடுத்து  கடந்த நவம்பர் மாதம் புயலின் போது குப்பைகள் அனைத்தும் கரையில் ஒரு ஓரமாக ஒதுங்கி இருந்தது. அப்போது இருவர் இதை சுத்தம் செய்ய வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் ஹெலர் எழுதிய கடிதம் இருந்த பாட்டிலை கண்டெடுத்தனர். அக்கடிதத்தில் “எழுதியவர் பெயர் மற்றும் முகவரி விரிவாக போடபட்டிருந்தது. அத்துடன் கடிதத்தை கண்டெடுப்பவர்கள் என்னை தொடர்புகொள்ளவும்” என அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததது. அதன்பின் ட்ராய் ஹெலரை கண்டுபிடித்து அந்த கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். இதை பார்த்த ஹெலரும் 1 நிமிடம் ஆடிப்போயுள்ளார். அத்துடன் இந்த பாட்டில் எவ்வளவு தூரம் செல்கிறது என பார்க்கதான் இவ்வாறு செய்தேன். தற்போது அது திரும்பி வந்ததது எனக்கு ஆச்சியர்மாக இருக்கிறது என ட்ராய் ஹெலர் தெரிவத்துள்ளார்.