நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக  நடைபெற்றுள்ளது.  திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் தனுஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.  சமூக வலைதளங்களில் அவரின் திருமண புகைப்படங்கள் வைரலானது.  ஆரம்பத்தில் அமெரிக்காவில் திருமணம் நடத்த திட்டமிட்ட நிலையில், தனுஷின் விருப்பப்படி ஜப்பானில் நடக்க முடிவு செய்யப்பட்டதால், அனைத்து ஏற்பாடுகளையும் நெப்போலியன் அங்கு நன்கு தயார் செய்தார்.

நெப்போலியன் மகன் திருமணத்தில் 70 வகையான சாப்பாடு பரிமாறப்பட்டதாக தெரிகிறது. வாழை இலை முதல் கல் உப்பு, மஞ்சள், நெய் என எல்லா பொருட்களும் பல இடங்களில் இருந்து ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக மகனின் திருமணம் நடந்தபோது நெப்போலியன் கண் கலங்கி அழுதுவிட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது