தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படம் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தில் நடிகைகள் மீனாட்சி சவுத்திரி, சினேகா, லைலா மற்றும் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்த பாடல் தற்போது youtube இல் செம டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த பாடலை இதுவரை 19 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததோடு, 1.15 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் ஒரு பாடல் வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் தென்னிந்திய சினிமாவில் அதிக பார்வையாளர்களை கடந்த இடத்தில் நடிகர் விஜயின் அரபிக் குத்து பாடல் முதலிடத்தில் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் இடத்தில் விசில் போடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.