தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசான மாநாடு  மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படம் கன்னட படமான மஃப்டி என்பதன் ரீமேக் படம் ஆகும். இந்த படம் மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் என்ற பாடலை ப குழு வெளியிட்டது. இந்த பாடலை ஏ.ஆர் ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் சிம்புவின் நம்ம சத்தம் என்ற பாடல் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.