தெலுங்கில் சென்ற 1970-களில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போதும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இவர் சம்பாதித்த பணத்தில் ஆந்திராவில் அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளார். மேலும் அறக்கட்டளை துவங்கி சமூகசேவை பணிகளும் செய்கிறார். சிரஞ்சீவிக்கு ராம் சரண் என்ற மகனும், சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகிய 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மகள் ஸ்ரீஜாவுக்கு, சிரஞ்சீவி ஐதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.

இந்த பங்களாவின் மதிப்பு ரூபாய்.35 கோடி இருக்கும் என தெலுங்கு இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மறுமணத்துக்கு அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சொகுசு பங்களாவை சிரஞ்சீவி வாங்கி கொடுத்திருக்கிறார்.