தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் உறுப்பினர் ஆவார். நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகை குஷ்பூ பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது தான் ‌ தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரத்தையும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவரிடம் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல சொகுசு கார்கள் இருக்கிறது. இதையெல்லாம் மொத்தமாக சேர்த்து அவரிடம் 4.55 கோடிக்கு மேல் அசையும் சொத்துக்கள் மட்டும் உள்ளது. இதுபோக 18 கோடிக்கு அசையா சொத்துகளும் உள்ளது. அவரிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டுமே சுமார் 7 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். மொத்தமாக நடிகை குஷ்புவிடம் 25 கோடி முதல் 28 கோடி வரை சொத்து உள்ளது. மேலும் இதில் சுந்தர் சியின் சொத்து மதிப்புகள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.