பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த  டிசம்பர் மாதம் 16-ம் தேதி ரிலீசாகியுள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவதார் திரைப்படம் தற்போது வரை 10,000-க்கும்  கோடி வசூலை கடந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவதார் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இனி வரும் காலங்களில் இன்னும் பல கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.