தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மே முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், ‘மொபைல்’ ரேஷன் கடைகளை செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் இனி வீடு தேடி வழங்கப்பட உள்ளது. அந்தந்த தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும். இதற்கான பணிகளை அந்தந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.