தெலுங்கு திரையுலகில் அம்மா காதாபாத்திரங்களுக்கு புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் சுதா. பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர், தந்தையின் நோயால் அனைத்தையும் இழந்து நிற்கிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் சுதா தனது கஷ்டமான வாழ்க்கையை பற்றி கூறி கண்ணீர் விட்டு கதறினார். அவர் கூறியிருப்பதாவது “தந்தையின் உடல் நிலை சரியில்லாததால் எங்களது சொத்துக்கள் அனைத்தும் கரைந்து விட்டது.
அப்பாவுக்கு புற்று நோய் பற்றித் தெரிந்த பிறகு தான், அனைத்து சொத்துகளும் விற்கபட்டது. நான் 6ஆம் வகுப்பு படிக்கும்போது என் அம்மா தாலியை விற்றுதான் எங்களுக்கு உணவளித்தார். இதனால் ஒன்றும் இல்லாத நிலைக்கு வீழ்ந்தோம். ஒரே கையெழுத்தில் பல நூறு கோடிகளை இழந்து கடனாளியாகி விட்டேன்.
எனினும் இப்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் என் ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறி விட்டான். என்னிடம் தகராறு செய்து சென்றுவிட்டான். தற்போது என்னுடன் அவன் பேசவில்லை” என சுதா கண்ணீர் மல்க கூறினார். ஏற்கனவே கணவர் தன்னை விட்டு பிரிந்து விட்டதாலும், மகனும் விலகி விட்டதாலும் சுதா தனிமையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.