பீகார் மாநிலம் ஜமுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது கணவன் தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள் அவமானப்பட்டுள்ளனர்.
ஜமுதியைச் சேர்ந்த சுனில் பிரசாத் வர்மா என்பவர் தனது இரண்டு மகள்களான சீமா மற்றும் பிந்து ஆகியோருக்கு கடந்த 2022 மே 11 அன்று வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவரது மருமகன் தனது குடும்பத்திற்கு இத்தகைய துன்பத்தை ஏற்படுத்துவான் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.
அவரது மகள் சீமாவின் கணவர் தனஞ்செயன் அவளை அவமானப்படுத்தி அடித்ததாகவும், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதோடு நில்லாமல், இரு சகோதரிகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சகோதரிகளின் கணவர்களும் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஜமுதி சயவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சைபர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.