சென்ற வருடம் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் தேர்வாகியிருந்தது. இதற்கான ரிசல்ட் விரைவில் தெரிந்துவிடும்.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த ஹாலிவுட் கிருட்டிக்ஸ் அசோசியேசன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ் விருது விழாவில் இந்த திரைப்படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது. அதில் சிறந்த வெளிநாட்டு திரை படம், சிறந்த ஆக்சன் திரைப்படம், சிறந்த ஸ்டண்ட், சிறந்த ஒரிஜினல் பாடல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.