மக்களின் பொழுதுபோக்கு செயலைகளில் ஒன்றான telegram செயலியில் அடிக்கடி புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது டெலிகிராம் செயலி நிர்வாகம் spoiler effect உடன் மூன்று புத்தம்புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹிட்டன் மீடியா:

இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைக்க முடியும். அதற்காக விருப்பமுள்ள புகைப்படத்தை தேர்வு செய்து அதன் மேற்புறம் வலது மூலையில் உள்ள புள்ளிகளை கிளிக் செய்து அதில் ஹைட் வித் ஸ்பாய்லர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது உங்கள் தேர்வு செய்யப்பட்ட புகைப்படம் மெல்லிய திரையால் மூடப்பட்டு விடும்.

ஜீரோ ஸ்டோரேஜ்:

இதன் மூலம் நம்முடைய மொபைலில் முன்னதாக இருந்த,ஆனால் தற்போது நீக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். அதன் கேலரி நமது மொத்த மொபைலின் அனைத்து வகை கோப்புகளையும் தலைப்பு வாரியாக பயன்படுத்த அனுமதி அளிக்கும் விதமாக இந்த அம்சம் உள்ளது.

நியூ ட்ராயிங் & டெக்ஸ்ட் டூல்:

இதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோவில் நமக்கு தேவையான டெக்ஸ்டை சேர்த்து அனுப்பிக் கொள்ளலாம். அதற்கான பல்வேறு வகையான பாண்டு மற்றும் ஸ்டைல் போன்றவற்றையும் நாம் தேர்வு செய்து கொள்ள முடியும். அதேசமயம் டெலிகிராமின் பிரீமியம் பயனர்கள் புதிய அனிமேஷன் எமோஜிகளையும் அனுபவிக்கும் வகையில் அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.