விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது ஏழு சீசன்களை கடந்துள்ள நிலையில் விரைவில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போவது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சிம்பு, சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இறுதியாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அக்ரீமெண்டில் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகும் எனவும் அக்டோபர் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.