உத்திரபிரதேச மாநிலத்தில் போக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு முகாஜித் (20) என்ற ஒரு வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் ஆணாக இருந்த நிலையில் அவருடைய ஆணுறுப்பை அகற்றி பெண்ணாக மாற்றியுள்ளனர். இவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஆப்ரேஷன் செய்த நிலையில் மறுநாள் காலை அவர் கண்விழித்த போது நீங்கள் பெண்ணாக மாறிவிட்டீர்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ‌ இது திட்டமிட்ட சதி என்று கூறினார். அதாவது ஓம் பிரகாஷ் என்ற வாலிபர் அவரைக் கடந்த இரு வருடங்களாக மிரட்டி துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் முகாஜித்துக்கு உடல் நலக்குறைவு இருப்பதாக கூறி அவரை ஓம் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருடைய அனுமதி இல்லாமலேயே மருத்துவர்களிடம் கூறி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஏற்கனவே உன்னை ஒரு பெண்ணாக மாற்றி விடுவேன் என ஓம் பிரகாஷ் கூறிய நிலையில் அதுபடியே அவர் செய்ததோடு தன்னுடன் வாழ வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். ‌

அதோடு முகாஜித் பெயரில் உள்ள சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்ற வேண்டும். அதை விற்று பெற்ற நான் லக்னோ சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காவிட்டால் முகாஜித்தின் தந்தையை சுட்டுக்கொன்று விடுவதாக ஓம்பிரகாஷ் மிரட்டியுள்ளார். இந்த தகவல் வெளியே தெரிய வந்ததை அடுத்து பாரதீய விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அந்தப் போராட்டத்தின் தலைவர் சியாம் பால் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பெரிய அளவில் உறுப்பு திருட்டு நடைபெறுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக முகாஜித் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கடந்த 16ஆம் தேதி ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.