பிரபல சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி Book 2 Pro 360 லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் Snapdragon 8cx Gen 2 processor உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் லேப்டாப்பை கம்பெனி 12th Gen Intel processor உடன் சேர்ந்து பிப்ரவரியில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த லேப்டாப் தற்போது தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மற்ற சந்தைகளிலும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த லேப்டாப் 13.3 இன்ச் டிஸ்ப்ளே உடையது. இது விண்டோஸ் 11 லேப்டாப் உடன் கிடைக்கும். இதன் பேட்டரி 35 மணி நேரம் பேக்கப் கொண்டது. இதில் 5g நெட்வொர்க் சப்போர்ட் மற்றும் எஸ் பென்ஸ் ஸ்டைல் உள்ளது. அதன் பிறகு கனெக்டிவிட்டிக்காக Wifi 6E கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்பின் விலை 1,24,200 ரூபாயாகும்