மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கதக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நகரில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவருக்கு 30 வயதான கணவர் உள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் அவரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லைமீறி  தனது நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து அவருடன் உறவு வைத்து கொள்ளச் சொல்லி தொல்லை செய்துள்ளார்.

கணவரின், நண்பரும் அப்பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசியும், பெண்ணின் எதிர்ப்பை மீறியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அப்பெண் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து கணவரின் நண்பர் அடிக்கடி அப்பெண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொல்லை செய்துள்ளார் ,”உன் கணவரால் உறவு கொள்ள முடியாது.

எனக்கு குழந்தை பெற்றுக் கொடு” எனக்கூறி தொந்தரவு செய்துள்ளார். இதனால் அப்பெண் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் கணவரின் நண்பர் மீதும் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரையும், கணவரின் நண்பரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.