மக்கள் வெளியேற்ற உத்தரவில் ஐநாவின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாசின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் ஐநா கவனம் செலுத்த வேண்டும் என  இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.  24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரவேலின் உத்தரவுக்கு ஐநா கண்டனம் தெரிவித்து இருந்தது. வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் மக்கள் வெளியேறுவது என்பது சாத்தியமில்லாதது என ஐநா பதில் சொல்லி இருந்தது.  காசா பகுதியில் மக்கள் வெளியேற முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.