கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்.சி தெருவில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. அவரை சுத்தியலால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜெயராணி தனது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜேம்ஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஜேம்ஸ் அணிந்திருந்த தங்கசெயின் மோதிரங்கள் உள்பட ஏழரை சவரன் நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையில் விசாரித்ததில் மருதன்கோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடன் கேட்டு கொடுக்காததால் ஜேம்சை கொலை செய்து பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது. இதனால் சுரேஷை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.