கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய மத்திகிரி பகுதியில் சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே நகர் பகுதியில் வணிகவரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா என்பவர் சுருதியிடம் சென்று தன்னை வருமானவரித்துறை அதிகாரி என் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இதனையடுத்து போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கிய ஏமாற்றிவிட்டதாகவும் இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க 1 லட்ச ரூபாய் தர வேண்டும் என கூறி மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இதுகுறித்து சுருதி விசாரித்ததில் தீபா வருமானவரித்துறை அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சுருதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீபாவை கைது செய்தனர்.