தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சீமான் பற்றி சொன்னது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலையிடம் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது, இந்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது ரொம்ப ரொம்ப கஷ்டம். நானும் கல்லூரிகளுக்கு எல்லாம் சென்று அரசியலுக்கு வாங்க வாங்க என்று தான் சொல்கிறேன். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. அரசியலுக்கு வந்த ஒரு சில இளைஞர்களும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடந்ததை பார்த்து பயந்து ஓடி விட்டார்கள். அவர்கள் என்னிடம் இப்படி எல்லாம் எதற்காக செய்கிறார்கள் என்று கேட்டபோது தம்பி காத்திருந்தால் ஒரு நாள் கண்டிப்பாக அனைத்தும் மாறும்.

நாம் புதிய அரசியலை முன்னெடுத்து செல்வோம் என்று கூறினேன். நான் பாஜக கட்சியில் இருந்தாலும் சொல்கிறேன் இந்த தேர்தலில் நடக்கும் அரசியலை மாற்றவே முடியாது. திருத்தவும் முடியாது என்றார். கடைசியில் என்னையும் சீமான் அண்ணனை போலவே பேச வைத்து விட்டீர்கள் என்று கூறினார். மேலும் பாஜக அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்தது கிடையாது. ஏனெனில் இருவருக்கும் பொதுவான எதிரி திமுக என்பதால் அண்ணாமலையும் சீமானும் திமுகவை தான் கடுமையாக விமர்சிப்பார்கள். இந்த நிலையில் பாஜக அண்ணாமலை கடைசியில் சீமானை போல பேச வைத்து விட்டீர்கள் என்று சொன்னது கவனத்தை ஈர்த்துள்ளது.