எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தற்பொழுது முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த வங்கியில் தங்களுடைய பிக்சட் டெபாசிட் விதிகளை வங்கியானது மாற்றியது. அதன்படி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் கணக்கு முன்கூட்டியே மூடினால் இப்பொழுது அதிக அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த அறிவிப்பானது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த விதிமுறை 5 கோடி டெபாசிட்டுகளுக்கு பொருந்தும். அதாவது டெபாசிட் தொகை 5 கோடிக்கு குறைவாக இருந்தால் 0.25% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 0.50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனி 0.75% செலுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பாக தான் டெபாசிட் மீதான வட்டி விகிதங்களை குறைத்தது. அந்த நேரத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி குறைக்கப்பட்டது.