பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் அவர்கள் twitter நிறுவனத்தை தன்வசப்படுத்தியதில் இருந்து அதில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். twitter நிறுவனத்தின் லோகோவில் இருந்து பெயர் வரை அனைத்திலும் மாற்றம் கொண்டு வந்ததோடு பயனர்கள் தினமும் பார்க்கும் பதிவுகளின் எண்ணிக்கையும் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதேபோன்று தற்போது பயனர்களிடமிருந்து வருட சந்தா கட்டணம் வசூலிக்கவும் அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் பயனர்களிடம் சந்தா வசூலிக்கும் நடைமுறை செயல்படுத்த இருப்பதாகவும் அதன்படி அடிப்படை அம்சங்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 83 கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது நாட்டிற்கு நாடு மாறுபடும் என்றும் ஆரம்ப கட்டமாக நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனை முயற்சியில் எந்த பயனர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. சந்தா செலுத்தும் பயனர்கள் பதிவுகளை லைக் செய்யவும் மறு பதிவு செய்யவும் புக் மார்க் செய்யவும் முடியும். ஆனால் சந்தா செலுத்தாதவர்கள் போஸ்ட் பார்க்கவும் படிக்கவும் வீடியோக்களை பார்க்கவும் பயனர்களை பின் தொடரவும் மட்டுமே முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.