மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டதொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பல வருடங்களாக நிலுவையில் உள்ள இந்த மசோதா மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்கள் சட்டசபைகளிலே 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும்.  நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இந்த மசோதா நாடாளுமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டு,  மாநிலங்களவையின் ஒப்புதலையும் பெற்றது.

ஆனால் அதற்கும் பிறகு இந்த மசோதாவுக்கு ஒரு சில கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன்  காரணத்தால் நிறைவேறாமல் இதுவரை நிலுவையில் உள்ளது.  இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து,

மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கபட்டது.இதை தொடர்ந்து இன்று  புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசி வபருகின்றார்.