ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி உள்ள தாலிபான்கள் பெண்கள் பணிபுரிய தடை விதித்துள்ளதால் திருமணம் ஆகாத பெண்களும் கணவரை இழந்த பெண்களும் உணவுக்கு உத்தரவாதம் இன்றி தவித்து வருவதாக அதிர்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கே பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி கற்க தடை, பெண்கள் பணிபுரிய தடை, ஆண் துணை இன்றி பெண்கள் வெளியே செல்ல தடை என தடை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பெண்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமணம் ஆகாத பெண்கள், விதவை பெண்கள் உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் உணவுக்கு உத்தரவாதம் அற்ற சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். முந்தைய ஆப்கான் பாதுகாப்பு படையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தியாகிகளுக்கான உதவித்தொகையும் தாலிப்பான் நிறுத்தி விட்டதால் அங்கு பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.