சமீப காலங்களாக பெண்கள் ஸ்கூட்டிகளை ஓட்டும் போது அதிக விபத்துக்களை சந்திக்கின்றனர். ஆனால் சில விபத்துக்கள் கடுமையான உயிரிழப்புகளுக்கு கூட காரணமாகிறது. அதாவது அனுபவம் மற்ற, சரியான எச்சரிக்கை, முழுமையாக வாகனங்களை ஓட்ட தெரியாதவர்கள் சாலைகளில் கவனக்குறைவாக கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.

அதேபோன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஸ்கூட்டியில் வேகமாக வந்து ஒரு கார் முன்னே கீழே விழுகின்றனர். அப்போது வேகமாக அந்த வழியே வந்த நபர் ஒருவர் பைக்கை தூக்கிவிட முயற்சிக்கிறார்.

ஆனால் பைக் முழுமையாக அணைக்கப்படாமல் வேகமாக அந்த நபரோடு இழுத்துச் சென்று ஆற்றில் விழுந்தது. இதனைக் கண்டு இரண்டு பெண்களும் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனுபவம் இல்லாமல் வாகனம் ஒட்டிய பெண்களை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் உதவ வந்து ஆபத்தில் சிக்கிய நபரை குறித்து வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.