தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். தன்னுடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலை நேரத்தில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தன்னுடைய பிறந்தநாளில் தன்னை பார்க்க வரும் நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மஞ்ச பையில் மரக்கன்றுகளை வழங்குகிறார்.
இந்நிலையில் தன்னுடைய 70-வது பிறந்த நாள் விழாவை முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் கழுத்தில் மாலை அணிந்து உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் கேக் வெட்டுகிறார். இது தொடர்பான புகைப்படத்தை அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மேன்மைக்காகத் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தோம். #HBDMKStalin70 pic.twitter.com/RFgPW0y4Me
— Udhay (@Udhaystalin) March 1, 2023