
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து அக்கட்சியின் கோடியில் இரண்டு யானைக்கள் இருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ள யானைச் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி சமாஜ்வாதி கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய மனு மீது நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.