மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “சைரன்” மற்றும் “டிராகன்” ஆகிய தமிழ் படங்கள் வெற்றி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரை உலகில் பிரபலமான அனுபாமா அதற்குப் பிறகு மலையாள படங்களில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மலையாள மொழியில் 3 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

இந்நிலையில் “ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா” என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் மீண்டும் அறிமுகமாகியுள்ளார். கடந்த 2023 இல் வெளியான “கருடன்” படத்திற்கு பிறகு அனுபாமாவின் அடுத்த மலையாள படம் இதுவாகும்.

இப்படத்தில் சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அனுபவமா கூறியதாவது, “எனக்கு நடிப்பு வராது. என்னால் நடிக்க முடியாது என என்னை ஏராளமானோர் கேலி செய்துள்ளனர் இவற்றையெல்லாம் மீறி இயக்குனர் பிரவீன் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு “டிராகன்”, “தில்லு ஸ்கொயர்” போன்ற படங்கள் எனக்கு வெற்றி படங்களாக அமைந்தது என்னை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது. என்னை ஆதரிப்பவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.” என உணர்ச்சிவசப்பட பேசியுள்ளார்.