மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீத அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். இந்த அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் கூடிய விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 8-வது ஊதியக்குழு தேர்தல் முடிவடைந்த பிறகு 2026-ம் ஆண்டு அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் தற்போது அரசு ஊழியர்கள் 18,000 ரூபாயை அடிப்படை சம்பளமாக பெறும் நிலையில் அது 26,000 ரூபாயாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.