
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை சூர்யாவின் 2d மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இதுவரை ரெட்ரோ திரைப்படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் OTT ரிலீஸை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வருகிற மே 31ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT-ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.