உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அருமையான இரண்டு அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது. அதாவது இன்ஸ்டால் செயலியை போல வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கான லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே வாட்ஸ் அப்பில் பிரைவசி நோக்கத்தை மேம்படுத்தும் அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

அதாவது கடவு குறியீடு மூலமாக அரட்டைகளை பூட்டும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடவு குறியீடு மூலம் அரட்டைகளை பூட்டும் வசதி முதன்மை ஸ்மார்ட்போனில் மட்டுமே இருந்தது. வாட்ஸ் அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் தற்போது இந்த வசதியை பயன்படுத்தலாம்.