இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த 75 ஆண்டுகளில் நம் இந்தியா அறிவியல் வளர்ச்சியில் கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது. அதாவது விண்வெளி ஆய்வு, அணுசக்தி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் நம்முடைய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் கூட்டு உழைப்பு உள்ளது. சுதந்திர இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற ஆட்சி செய்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டுமே இதற்கு சொந்தம் கொண்டாட முடியாது.

இதற்கு விதையை ஊன்றியவர்கள் நம்முடைய சுதந்திரப் போராட்ட தியாகிகள் முன்னோடிகள். 1952 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம், 1954 ஆம் ஆண்டு அணுசக்தி துறை, 1958 ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை, 1971 ஆம் ஆண்டு இந்திய மின்னணுவியல் துறை, 1972 ஆம் ஆண்டு இந்திய விண்வெளித் துறை, 1980 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை போன்ற துறைகள் இந்தியாவில் நியமிக்கப்பட்டது. தற்போது இந்தியாவானது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு தொழில் மற்றும் வேளாண்மை துறைகள் வளர்ச்சிக்கு வித்திட்டு உள்ளவை இந்த துறைகளே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஆயிரத்து 980 ஆம் ஆண்டு குடிநீர் பஞ்சத்தை போக்கவும் வரட்சியை குறைப்பதற்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள், 1983 ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம், 1986 ஆம் ஆண்டு உலகின் தனிப்பெரும் ரயில்வே சேவைக்கான பதிவை கணினி மையம், 1986 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பரிசோதனை குழாய் குழந்தை, 1991 ஆம் ஆண்டு மரபணு ரேகைகளை குற்றவியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தொடங்கியது என இந்தியா இன்று வரை அறிவியல் துறையில் பல வளர்ச்சிகளை கண்டுள்ளது.