அறிவியல் சார்ந்த வினாடி வினா போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் அதிகம் நடத்தப்படுவது வழக்கம். அதில் இருக்கும் கேள்விகள் நமக்கு ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் அதில் இருக்கும் சுவாரஸ்யமும் அதிகம். அதன்படி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடியது முதல் அனைத்திலும் நிறைந்துள்ள அறிவியல் குறித்த பதிவை இதில் பார்க்கலாம்.

  1.  தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் – ஆரல் வாய்மொழி
  2.  பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
  3.  எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
  4.  நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
  5. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை
  6.  கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் – சக்கர அச்சு
  7.  சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
  8. அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
  9. ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
  10.  விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
  11.  அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
  12.  ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு – சிங்கம்
  13. தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு – யானை
  14.  ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்
  15. விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை
  16. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
  17. பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்
  18.  கடல் நீர் ஆவியாதல் – வெப்பம் கொள்வினை
  19. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு – கார்பன் -டை-ஆக்ஸைடு
  20. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – ஆவியாதல்