கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் ஒன்று பெரும் பேசப் பொருளாக திகழ்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இந்த உளவு பலூன்கள் தான் உயரமான கண்காணிப்பு உளவு சாதனங்களின் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பல தொழில்நுட்பங்களின் தொடக்கமாகும். ஹீலிங்யம் காற்றினால் நிரப்பப்படும் இந்த இலகு ரக பலூன்கள் வானில் 60,000 அடி முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் அடி வரை பரக்கக் கூடியவை.

இந்த உயரமானது வணிக விமானங்கள் பறக்கக்கூடிய உயரத்தை விட அதிகமாகும். காற்றானது செல்லும் பாதை மற்றும் காற்றில் அழுத்தத்தை கொண்டு செல்லக்கூடியது இவை. வானில் எய்வது முதற்கொண்டு தயாரிப்பு வரை மற்ற பறக்கும் உளவு சாதனங்களைக் காட்டிலும் இவற்றின் செலவு மிக குறைவாகும்.

இரண்டாம் உலக போரின் போது எதிரி நாட்டுப்படையினை வானில் இருந்து கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட இவை தற்போது சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வகை உளவு பலூன்கள் இன்னும் சில நாட்களில் அவர்களின் எல்லைப் பகுதிகளில் நாட்டில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை கண்காணிக்க மற்றும் அவர்கள் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களை கண்காணிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.